close
Choose your channels

'பீஸ்ட்' சென்சார், ரன்னிங் டைம் தகவல் வெளியாகிவிட்டதா?

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து ’யூஏ’ சான்றிதழ் அளித்து உள்ளதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் சென்சார் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை .

சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்களுடன் கூடிய புதிய போஸ்டர் இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்பு கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பெரிய எதிர்பார்ப்புக்குரிய ‘பீஸ்ட்’ திரைப்படம் உலக அளவில் வசூலில் மிகப்பெரிய சாதனையை எட்டும் என்று கூறப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.