காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற 'பிகில்' நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,February 21 2021]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது காவல்துறையில் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் பதவியைப் பெற்று உள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் ராயப்பன் கேரக்டரை கொலை செய்யும் அலெக்ஸ் என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் விஜயன். கேரளாவை சேர்ந்த இவர் ஏற்கனவே ‘திமிறு’, ‘கொம்பன்’ உள்பட ஒருசில படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். விஜயன் நடிகர் மட்டுமின்றி சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

கேரள காவல்துறையின் கால்பந்தாட்ட அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்த இவர் சர்வதேச கால்பந்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பதும் பல கோல்களை இவர் கேரள கால்பந்து அணிக்காக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு அளித்துள்ளது. கேரள காவல் துறையினரிடம் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் என்ற பதவி உயர்வை தற்போது பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
 

More News

அருண்விஜய் அளவுக்கு வளர்ந்திருக்கும் அவர் வளர்த்து வரும் நாய்: ஆச்சரிய புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து கொண்டிருந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித்துடன் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் தான் நடிகர் அருண் விஜய்க்கு

உலகின் சிறந்த சொல் செயல் தான்: சிவகார்த்திகேயனை வாழ்த்திய ஐபிஎஸ் அதிகாரி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது என்பதும்

திமுகவில் போட்டியிட விருப்பமனு வாங்கிய தமிழ் திரைப்பட இயக்குனர்!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் திமுகவில் போட்டியிட விருப்ப மனு வாங்கியுள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

15 வருடத்திற்கு முன் இருந்த அதே கவர்ச்சி: ஜெயம் ரவி பட நாயகிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

15 வருடங்களுக்கு முன் ஜெயம்ரவியுடன் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்த நிலையில்

'குக் வித் கோமாளி'யில் இந்த வாரம் எலிமினேஷன் யார்? 

ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு பெற்ற 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருவது என்பது தெரிந்ததே. இந்த சீசனில் மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின்,