close
Choose your channels

'குக் வித் கோமாளி'யில் இந்த வாரம் எலிமினேஷன் யார்? 

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு பெற்ற ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருவது என்பது தெரிந்ததே. இந்த சீசனில் மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகிய எட்டு குக்’களும், புகழ், பாலா, சரத், பார்வதி, மணிமேகலை, சிவா, ஷிவாங்கி, சுனிதா, ஆகிய எட்டு கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் ஏற்கனவே மதுரை முத்து, தீபா மற்றும் தர்ஷா ஆகிய மூவரும் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக எலிமினேஷன் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அறிமுகமான நடிகை ரித்திகா தான் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்ததிலிருந்தே பாலா தொடர்ச்சியாக மூன்று முறை இவருக்குத்தன் கோமாளியாக வந்துள்ளார் என்பதும் பாலாவின் ராசி தான் அவரை வெளியேற்றிள்ளதாகவும் காமெடியாக கூறப்பட்டு வருகிறது

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் செய்யப்பட்ட மதுரை முத்து, தீபா மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் செய்யப்பட்டபோது அவர்களுக்கு பாலா தான் கோமாளியாக இருந்ததால் எலிமினேஷன் வாரத்தில் பாலாவின் குக் எலிமினேஷன் செய்யப்படுவார் என்ற செண்டிமெண்ட் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ளது

இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீசன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.