கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்து கூறிய 'பிகில்' நடிகை!

  • IndiaGlitz, [Monday,October 21 2019]

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் ஆதரவில் ’உதவும் உள்ளங்கள்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் 1222 குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி கொண்டாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ‘பிகில்’ நடிகை இந்துஜா மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து இந்துஜா கூறியபோது, பிகில் படத்தில் நடிக்க படக்குழுவினர் என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி கிருத்திகா உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

அதேபோல் நடிகை அதுல்யா ரவி கூறியபோது, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.

More News

விஜயகாந்த் இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் கோபிநாத்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வரும் கோபிநாத், ஏற்கனவே 'நிமிர்ந்து நில்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

'அசுரன்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய 'அசுரன்' திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது 

சந்தானம் படத்தில் இணைந்த சிவாஜி-எம்ஜிஆர் நாயகி: 400வது படம் என தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'உயர்ந்த மனிதன்', 'பார் மகளே பார்,' புதிய பறவை', 'எங்கள் தங்க ராஜா', 'பாலும் பழமும்', 'பாவை விளக்கு' உள்பட பல படங்களிலும்

'கைதி' டைட்டிலில் கமலுக்கு கெளரவம் அளித்த இயக்குனர்!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

நான் நல்ல படம் எடுக்கும் நல்ல பாம்பு: எஸ்.ஆர்.பிரபு

தீபாவளி திரை விருந்தாக விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள்