close
Choose your channels

முகத்தில் துப்பிய 'பிகில்' நடிகைக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகர்

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ’பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட மிகப் பெரிய புகழ்பெற்று கோலிவுட்டில் அதிக வாய்ப்புகளையு பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கால்பந்து வீராங்கனை கேரக்டரில் நடித்தவர் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவரது கேரக்டரை இயக்குனர் அட்லி மிகவும் சுவராஸ்யமாக உருவாக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை இந்திராஜாவும், அவருடைய தந்தை ரோபோ சங்கரும் இணைந்து சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது காமெடியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு பழைய படத்தின் பாடலுக்கு இருவரும் இணைந்து நடித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரோபோ சங்கரின் முகத்தில் இந்திரஜா துப்பும் வகையில் முடிவடையும். இந்த வீடியோ கடந்த 10 நாட்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் மகள் இந்திரஜாவுக்கு பதிலடி தரும் வகையில் வடிவேலு காமெடி வீடியோவை வெளியிட்ட ரோபோ சங்கர், அந்த வீடியோவின் இறுதியில் கையில் இருக்கும் டீயை இந்திரஜாவின் முகத்தில் வீசும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz