close
Choose your channels

'மாலை 4.30 மணிக்கு என் டார்லிங் நயன்தாரா' அட்லியின் 'பிகில்' டுவீட்

Wednesday, September 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற 'உனக்காக' என்று தொடங்கும் மெலடி பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் அட்லி அறிவித்துள்ளார்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்களின் இந்த 'உனக்காக' என்ற மெலடி பாடல் என்னுடைய பேவரைட் பாடல் என்றும் இந்த பாடல் மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்றும், என்னுடைய டார்லிங் நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம் என்றும் அட்லி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அட்லியின் முதல் படமான 'ராஜா ராணி' திரைப்படத்தில் நயன்தாரா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுவரை 'பிகில்' படத்தின் பிரமோஷன் அனைத்துமே விஜய்யை மையப்படுத்தி மட்டுமே வெளிவந்த நிலையில் தற்போது முதல் முறையாக விஜய்யுடன் நயன்தாரா இணைந்து இருக்கும் ஒரு அட்டகாசமான போஸ்டரையும் அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து புரமோஷனில் நயன்தாராவும் களம் இறங்கி விட்டதால் புரோமோஷன் உச்சகட்டத்தை எட்டி உள்ளதாக கருதப்படுகிறது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.