1186 மார்க் எடுத்த மாணவரின் தந்தையை அடித்து நொறுக்கிய பாஜகவினர்

  • IndiaGlitz, [Tuesday,September 05 2017]

முன்பெல்லாம் குறைந்த மார்க் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள், முதல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தற்கொலை செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு உதாரணம் அரியலூர் அனிதா.

1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரை விட அதிக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் ஒரு மாணவர் 1186 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இருப்பினும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த மாணவரின் தந்தை அய்யப்பன் என்பவர் செங்கத்தில் பாஜக ஒன்றிய செயற்குழு பொதுக் கூட்டம் நடந்த போது பாஜக அரசை எதிர்த்து கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அய்யப்பனை அடித்து உதைத்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, அடித்த பாஜகவினரை கைது செய்யாமல், அடிவாங்கிய அய்யப்பனை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சிறைக்கு வெளியே வந்தார் குண்டர் சட்டத்தின் குரல்வளையை நெறித்த வளர்மதி

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதிஉத்தரவிட்டது..

பாரதிராஜா தலைமையில் நடந்த 'களவாணி' நடிகரின் திருமணம்

விமல், ஓவியா நடித்த 'களவாணி' படத்தில் யதார்த்தமான வில்லனாக அறிமுகமான திருமுருகன்,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவிய மாணவர்கள் போராட்டம்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையே கொந்தளிக்க செய்துவிட்டதால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது.

வளர் பெளர்ணமி போல் வளர வளர்மதிக்கு வாழ்த்து. கமல்

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்ச்சி

வீரமரணம் அடைந்த போலீஸ் அதிகாரியின் மகளுக்கு உதவும் கிரிக்கெட் வீரர்

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் என்பவர் வீரமரணம் அடைந்தார்.