'வல்லவனுக்கு வல்லவன்' ஆக மாறும் 'அசால்ட் சேது'?

  • IndiaGlitz, [Monday,September 28 2015]

ஜிகர்தண்டா' படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா, தற்போது அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜின் இறைவி, பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக், மசாலா படம், உறுமீன், கவலை வேண்டாம், பாம்புச்சட்டை ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் பாபிசிம்ஹா, தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாபிசிம்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு 'வல்லவனுக்கு வல்லவன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கடந்த 1965ஆம் ஆண்டு ஜெமினிகணேசன், மனோகர் நடித்த படம் ஒன்று வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பாபிசிம்ஹா நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'அசால்ட் புரடொக்ஷன்ஸ்' என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பாபிசிம்ஹா நடித்த 'ஜிகர்தண்டா' படத்தில் அவருடைய கேரக்டரின் பெயர் 'அசால்ட் சேது' என்பதும் அனைவரும் அறிந்ததே. தனக்கு தேசிய விருது பெற்று தந்த கேரக்டருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அதே பெயரில் புரடொக்ஷன் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக ஷிவதா நாயர் மற்றும் பூஜா தேவரியா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

More News

விஜய்யின் நீலக்கண் ரகசியம். இதுவரை வெளிவராத 'புலி' தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும்...

விஜய்தான் மாஸ். இதற்கு ஆப்ஷனே தேவையில்லை. ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 59' படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், நேற்று குஷ்பு நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்......

விஜய்யின் 'புலியுடன் மோதுகிறதா அஜீத்தின் 'வேதாளம்?

கடந்த சில நாட்களாக இணையதளங்கள், சமூகவலைத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி-வானொலி அனைத்திலும் புலி மற்றும் வேதாளம் படங்களின் செய்திகளே பெரும்பாலும் ஆக்கிரமித்து வருகின்றது. இந்த படங்களின் டிரெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி வருவதை அடுத்து அஜீத்-விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது......

இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸின் 'கோ 2' டிராக் லிஸ்ட்

தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா நடிக்கும் 'கோ 2' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது....

அக்டோபர் 9-ல் அனுஷ்காவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவரது அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.....