close
Choose your channels

சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு சம்பவம்: ரஜினியின் 'தலைவர் 171' ப்ரோமோ பார்த்த பிரபலம்..

Monday, April 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 171’ படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த வீடியோவை பாலிவுட் பிரபலம் ஒருவர் பார்த்ததாகவும் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்திருப்பதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தலைவர் 171’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதற்குள் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ ’லியோ’ படங்கள் போல் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றதாக கூறப்பட்டது.

வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ப்ரோமோ வீடியோவை தான் பார்த்ததாக ’அனிமல்’ படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்ததும் எனக்கு படத்தை பார்க்க வேண்டும் போல் ஆவல் இருப்பதாகவும் ரஜினியை வைத்து அவர் சம்பவம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த ப்ரோமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.