close
Choose your channels

விஜய்-ரன்வீர் சிங் படத்தை இயக்குகிறாரா? பிரபல இயக்குனர் தகவல்!

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான 'சர்க்கஸ்’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷெட்டி, ‘ ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்பட பிரபல தென்னிந்திய நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.

அப்போது விஜய் மற்றும் ரன்வீர் சிங் ஒரு படத்தில் இணைய வாய்ப்பு உள்ளதா? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தை நீங்கள் இயக்குவீர்களா? என்று கேட்டதற்கு அவர் சுவராசியமான பதிலளித்தார்.

விஜய் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய இருவருமே மிகச் சிறந்த டான்சர்கள். இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் அந்த படம் மாஸ் படமாக இருக்கும் என்றும் அப்படி ஒரு வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் நிச்சயம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos