close
Choose your channels

எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்.. 'மாமன்னன்' விழாவில் போனிகபூர்..!

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலகில் அழகான மற்றும் கவர்ச்சியான நடிகை என்றால் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான் என ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் தயாரிப்பாளர் போனி கபூர். அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’துணிவு’ உள்பட பல படங்களை தயாரித்து உள்ள போனி கபூர் நேற்று ‘மாமன்னன்’ திரைப்பட விழாவில் தனது மனைவியை ஸ்ரீதேவியையும் கீர்த்தி சுரேஷையும் செய்யும் ஒப்பிட்டு பேசி உள்ளார்.

‘என்னை பொருத்தவரை திரையுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று போனிகபூர்-ஸ்ரீதேவி திருமண நாளை முன்னிட்டு அவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ’1996 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தான் எங்கள் திருமணம் நடந்தது. இன்று 27 வருடங்கள் நிறைவடைந்துள்ளன’ என்று கூறி ஸ்ரீதேவியுடன் இருந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.