ஏர்லாக், போர்வெல் மிஷின்: இதை ஏன் முதலில் செய்யவில்லை?

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை ஆழ்துளையில் இருந்து மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்

இந்த நிலையில் சிறுவனை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டபோதிலும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, தற்போது கடைசியாக போர் மெஷின் மூலம் துளை போடப்பட்டு வருகிறது

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ரிக் என்ற இயந்திரம் கொண்டு முதலில் துளை போட்ட போது அந்த மெஷின் பழுதடைந்ததால் தற்போது கம்ப்ரசர் மூலம் இயங்கும் போர்வெல் மிஷின் மூலம் ட்ரில் போடப்படுகிறது. இந்த போர்வெல் மிஷின் ஒரு மணி நேரத்தில் 100 அடி வரை தோண்ட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த போர்வெல் மிஷினை ஏன் முதலிலேயே பயன்படுத்தப்படவில்லை என சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போர்வெல் மிஷின் மூலம் மூன்று இடங்களில் துளை போட்டு, அந்த மூன்றையும் இணைக்கக்கூடிய அளவிற்கு ரிக் எந்திரத்தை பயன்படுத்தி இருந்தால் இந்நேரம் சுர்ஜித்தை காப்பாற்றி இருக்கலாம் என்று அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்

அதேபோல் குழந்தை 26 இருக்கும்போதே ஏர்லாக் செய்து அந்த இடத்திலேயே குழந்தையை நிற்பாட்டாமல் 85 அடிக்கு கீழ் போன பின்னர் ஏர்லாக் செய்தது ஏன்? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இருப்பினும் கேள்வி கேட்பது ரொம்ப சுலபம். நடைமுறைப்படுத்துவதன் சிக்கல் மீட்புப்பணியினர்களுக்கு மட்டுமே தெரியும். தற்போது முழு ஈடுபாட்டுடன் மீட்புப் பணிகளில் இருக்கும் போராட்டக்காரர்களை கேள்விமேல் கேள்வி கேட்பதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

More News

நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்யும் நடிகர்!

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என நடிகர் தாமு செய்த பிரார்த்தனை செய்து வருகிறார்.

அனைத்து சுர்ஜித்தையும் காப்பாற்றுங்கள்: ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்

கடந்த வெள்ளி அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணறு ஒன்றில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன்

குழந்தை சுர்ஜித்: 66 மணி நேரமாக தொடரும் போராட்டம்

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துழை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 64 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

'பாகுபலி 2' வசூல் சாதனை முறியடித்ததா பிகில்?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் முதல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 130 கோடி

பாறை என்பது நல்ல வாய்ப்பு: சுர்ஜித் மீட்புப்பணி குறித்து கவிஞர் வைரமுத்து 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த பல மணி நேரங்களாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்