close
Choose your channels

'பாகுபலி 2' வசூல் சாதனை முறியடித்ததா பிகில்?

Monday, October 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் முதல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 130 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் நாள் வெள்ளிக்கிழமை இந்த படம் சென்னையில் மட்டும் 1.79 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் நாளான சனிக்கிழமை 1.73 கோடியும், மூன்றாம் நாளான ஞாயிறன்று 1.74 கோடி என மொத்தம் 5.26 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' திரைப்படம் சென்னையில் முதல் வார இறுதியில் ரூ.3.24 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிகில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 55 முதல் 58 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இந்த படம் தமிழகத்தில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.