close
Choose your channels

சன்னி லியோனிடம் 'தல' ரகசியத்தை கூறிய சிஎஸ்கே வீரர் 

Sunday, May 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் நடிகைகளைப் போலவே ஒரு சில கிரிக்கெட் வீரர்களும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக சுவராசியமான வீடியோக்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் பிராவோ ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் நேரடியாக ஒருவருக்கொருவர் உரையாடினார்கள். இந்த உரையாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த உரையாடலின்போது ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் எம்எஸ் தோனி அவர்களுக்காக ஒரு சிறப்பு பாடலை இயற்றி வருவதாக பிராவோ ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார்

ஏற்கனவே ’சித்திரம் பேசுதடி 2’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் பிராவோ பாடல் பாடியுள்ள நிலையில் தோனிக்காக சிறப்பு பாடலை இயற்றுவதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தோனிக்காக இயற்றும் இந்த பாடலிலும் பிராவோ டான்ஸ் ஆடி உள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் இந்த பாடலின் தலைப்பு எண் 7 என்றும் அவர் கூறியிருக்கிறார்

தோனியின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் ஆகியவற்றைக் கொண்டு இந்த பாடல் உருவாக்க இருப்பதாகவும் சன்னி லியோனிடம் பிராவோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் விரைவில் பிராவோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகவிருப்பதால் இந்த பாடலை எதிர்பார்த்து தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment