'தல' புகழை பாட்டாக பாடிய பிராவோ

தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ அவர்கள் பாடல் ஒன்று பாடியுள்ளது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தல தோனி கேப்டனாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புகழ்பெற்ற வீரராக இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் வீரர் பிராவோ. இவர்கள் இருவரும் இணைந்து பேட்டிங் செய்யும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பது தெரிந்ததே. மேலும் தோனியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தோனியின் புகழ் குறித்து பிராவோ ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தோனியின் புகழ் பாடும் இந்த பாடலை தற்போது தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழ் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி 2’ என்ற திரைப்படத்தில் தமிழ்ப்பாடல் ஒன்றை பாடி அதற்கு பிராவோ நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடிக்கு கிடைத்த 'பெற்றோர்' புரமோஷன்

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவியை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தல அஜித் ஸ்டைலில் பைக் ரேஸில் ஈடுபடும் விஜய் நாயகி

பைக் ரேஸ் என்றாலே கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு தல அஜித் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பைக்கையும் தல அஜித்தையும் பிரிக்க முடியாது. இந்த நிலையில் தல அஜித் ஸ்டைலில் விஜய்யின் 'மாஸ்டர்'

இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம்: கமல்ஹாசன்

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து அவருடைய உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

அதை மட்டும் கண்ட்ரோல் செய்தால் ஒரு லட்சம் டாலர் பரிசு: வேற லெவல் பிக்பாஸ்

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது போல் தற்போது ஹாலிவுட்டில் வயது வந்தவர்களுக்கான ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 43 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520