கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை தாக்கல்

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ஆம் ஆண்டு அவருடைய பண்ணை வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக சிபிஐ இதுகுறித்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது கலாபவன் மரணம் குறித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில் கலாபவன் மணியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால் தான் அவர் மரணம் அடைந்தார் என்றும், அவருக்கு பச்சை காய்கறிகள் உண்ணும் பழக்கம் இருந்ததால் அவரது உடலில் க்ளோர்பைரிபோஸ் என்ற பூச்சிக் கொல்லிகள் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கலாபவன் மணியை யாரும் கொலை செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

More News

முதலில் சந்திரமுகி 2 எடுக்கவே நினைத்தேன்..! ஏ.ஆர் முருகதாஸ் பேட்டி.

ரஜினிகாந்த், நயன்தாரா, நடித்துள்ள தர்பார் படம் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் முருகதாஸ் படம் பற்றி பேட்டி அளித்துள்ளார்.  

2019-ன் டாப் நம்ம விஜயண்ணா தான்.. ட்ரென்டிங் லிஸ்ட் வெளியிட்ட டிவிட்டர் நிர்வாகம்..!

ட்விட்டரின் பொழுதுபோக்கு வகையில் 2019-ஆம் ஆண்டின்  அதிகம் மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக விஜய்யின் பிகில் போஸ்டர் இடம் பெற்றுள்ளது.

கலாபவன் மணி எப்படி இறந்தார்..? அறிக்கை வெளியிட்ட சிபிஐ.

'கலாபவன் மணி கொல்லப்படவில்லை, கல்லீரல் கெட்டுப் போன நிலையிலும் தொடர்ந்து மது அருந்தியதே அவரின் மரணத்துக்குக் காரணம்' என்று சி.பி.ஐ அறிக்கை அளித்துள்ளது.

சிம்புவின் 'மாநாடு' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது.

விஜய்சேதுபதியுடன் இணையும் பா.ரஞ்சித்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது ஆர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள்