close
Choose your channels

தள்ளி போகிறதா 'சந்திரமுகி 2'? 'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு ஜாக்பாட்..!

Friday, September 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ராகவா லாரன்ஸ் நடித்த ’சந்திரமுகி 2’ மற்றும் விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ’சந்திரமுகி 2’ திரைப்படம் இரண்டு வாரங்கள் தள்ளி போகும் என்று செய்திகள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

’சந்திரமுகி 2’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் ’மார்க் ஆண்டனி’ கிட்டத்தட்ட சோலோவாக வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இந்த படத்தின் ஓப்பனிங் கலெக்ஷன் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ’சந்திரமுகி 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி என மாற்றப்பட்டால் அதே தேதியில் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ சித்தார்த்தின் ‘சித்தா’, விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ மற்றும் ’பார்க்கிங்’ ஆகிய 5 திரைப்படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos