close
Choose your channels

செம்ம கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் - கங்கனா ரனாவத்.. 'சந்திரமுகி 2' படத்தின் சூப்பர் ஸ்டில்..!

Tuesday, June 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ், நடிப்பில் பி. வாசு இயக்கத்தில், எம்.எம் கீரவாணி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சந்திரமுகி கெட்டப்பில் கங்கனா ரனாவத் மற்றும் வேட்டையன் கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் இருக்கும் அட்டகாசமான ஸ்டில் ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் பெரும் படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment