சென்னை மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை மரணம்! 17 வயதில் இப்படி ஒரு சோகமா?

  • IndiaGlitz, [Tuesday,November 15 2022]

சென்னையை சேர்ந்த பிரியா என்ற கால்பந்து வீராங்கனைக்கு கால் அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சற்றுமுன் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது பிரியா என்பவர் சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் இவர் மாவட்ட அளவிலான பல கால்பந்து போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

இந்த நிலையில் கால் சவ்வு பிரச்சனை காரணமாக பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களுக்கு பின் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

17 வயதில் கால்பந்து போட்டியில் பெரும் சாதனை செய்ய வேண்டும் என்று பெரும் கனவுகளுடன் இருந்த பிரியா திடீரென காலமாகியுள்ளது அவரது குடும்பத்தினர்களூக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

More News

பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிங்களா? சுற்றுலா தளத்திற்கு வந்திருக்கிங்களா? ராபர்ட் மாஸ்டரை ரோஸ்ட் செய்தது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டரை ஜனனி 'நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து வந்திருக்கிங்களா? அல்லது சுற்றுலாவுக்கு வந்திருக்கிங்களா? என ரோஸ்ட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.5 கோடி பட்ஜெட்.. அரைசதம் அடித்த 'லவ் டுடே': திரையுலகினர் வாழ்த்து!

ரூபாய் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான பிரதீப் ரங்கநாதனின் 'லவ்டுடே' திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் 'அப்பத்தா' பாடல்: பட்டையை கிளப்பும் வடிவேலு!

வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது 'பிரின்ஸ்': டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அறிவிப்பு

தீபாவளி கொண்டாட்டமாக  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான 'ப்ரின்ஸ்' திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங்

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் தெலுங்கு நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 80.