close
Choose your channels

பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிங்களா? சுற்றுலா தளத்திற்கு வந்திருக்கிங்களா? ராபர்ட் மாஸ்டரை ரோஸ்ட் செய்தது யார்?

Tuesday, November 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டரை ஜனனி ’நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து வந்திருக்கிங்களா? அல்லது சுற்றுலாவுக்கு வந்திருக்கிங்களா? என ரோஸ்ட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பிபி ரோஸ்ட் என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அவர்களது பலவீனங்களை சொல்லி ரோஸ்ட் செய்ய வேண்டும் என்பது தான் டாஸ்க்.

இந்த நிலையில் ஜனனி, ராபர்ட் மாஸ்டரை அழைத்து, ‘எல்லோரையும் டார்லிங் டார்லிங் என்று கூப்பிட்டு வருகிறீர்கள், நீங்கள் பிக்பாஸ் வீட்டில் வந்து வந்திருக்கிங்களா? அல்லது சுற்றுலாவிற்கு வந்திருக்கிங்களா? என கேட்டதும் அதனை ரசித்து ரக்சிதா சிரிக்கும் காட்சி இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளன.

இந்த டாஸ்க்கில் சிறப்பாக ரோஸ்ட் செய்த ஒருவரை மற்றவர் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்றும் வெற்றி பெறுபவர்களுக்கு 400 புள்ளிகள் கொடுக்கப்படும் என்றும் பிக்பாஸ் அறிவித்துள்ளார். இந்த பிபி ரோஸ்ட் டாஸ்க் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.