close
Choose your channels

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

Tuesday, November 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் தெலுங்கு நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 80.

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி நடிகர் கிருஷ்ணாசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தெலுங்கு திரையுலகினர் நேரில் சென்று கிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணாவுக்கு மகேஷ்பாபு உள்பட 5 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணா கடந்த 1965-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா 350க்கும் மேற்பட்ட படங்களில் ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.