விஷாலுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,December 07 2017]

ஆர்.கே.நகரின் வேட்பாளர் இறுதி பட்டியல் சற்றுமுன் வெளியாகிவிட்டதால் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் விஷாலுக்கு ஆதரவாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் வரும் ஞாயிறு அன்று சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் வாக்குரிமை தொடர்பாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட மூன்று பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வாக்குரிமை தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் பல தயாரிப்பாளர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகும் நிலை இருப்பதாக குறிப்பிட்டு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி அதே நேரத்தில் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும், வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று கூறி இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More News

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் 58 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியானது. அதில் விஷால் பெயர் இல்லை என்பதால் அவர் போட்டியிடும் வாய்ப்பு இனி இல்லை என்றே கூறப்படுகிறது.

நடிகராக மாறிய இயக்குனர் சுசீந்திரன்

கோலிவுட் திரையுலகில் பல இயக்குனர்கள் நடிகர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரனும் தற்போது நடிகராக மாறிவிட்டார்.

அந்த 2 பேரை காணவில்லை, உயிருக்கு ஆபத்தா? விஷால் அச்சம்

ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பாக இன்று மதியம் 3 மணிக்குள் முன்மொழிந்த அந்த இரண்டு பேர்களும்

ஆண்டவா! அராஜகத்தில் இருந்து என் அன்பான நாட்டை காப்பாற்று: விஷால்

இதுவரை தேர்தல் கமிஷன் வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்டது விஷாலின் விஷயத்தில் தான்

ஆர் கே நகரும் ஆம்பூர் பிரியாணியும்

ஆர்.கே நகர் இடைதேர்தலில் தினகரன் என்ற பெயரில் நான்கு பேரும், மதுசூதனன் பெயரில் மூன்று பேரும் மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.