close
Choose your channels

சென்னை வசூலில் சிக்ஸர் அடித்த 'சென்னை 28 II'

Monday, December 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com



சென்னையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து 199 ரன்கள் எடுத்து ரன்மழை பொழிந்த நிலையில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன வெங்கட்பிரபுவின் கிரிக்கெட் படமான 'சென்னை 28 II' வசூல் மழையில் நனைந்துள்ளது. கடந்த வார இறுதியில் சென்னையில் 21 திரையரங்குகளில் 233 காட்சிகள் திரையிடப்பட்ட இந்த படம் ரூ.74,26,580 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். மேலும் இந்த படம் வெளியான டிசம்பர் 9 முதல் 18 வரை ரூ.:2,65,29,860 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் கிங் என்பதை நிரூபித்துள்ளது.

இதேபோல் கடந்த 1ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படம் நேற்று வரை சென்னையில் ரூ.2,01,45,370 வசூல் செய்துள்ளது. கடந்த வாரம் மட்டும் இந்த படம் சென்னையில் 9 திரையரங்குகளில் 57 காட்சிகள் ஓடி ரூ.7,85,040 வசூல் செய்துள்ளது.

மேலும் 50வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கும் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் கடந்த வாரம் 4 திரையரங்குகளில் 15 காட்சிகள் ஓடி ரூ.1,62,200 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் நேற்றைய தேதி முதலான மொத்த வசூல் ரூ.,5,26,32,740 ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.