close
Choose your channels

திமுகவுக்கு இதுவே இறுதி… தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் பேச்சு!

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கயத்தாறு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுக காணாமல் போய்விடும் எனச் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்க்கட்சி விமர்சனம் செய்து வருகிறது. அதிமுகவிற்கு இருக்கும் செல்வாக்கை கயத்தாறு பகுதியில் வந்து பாருங்கள் எனக் கூறினார். முதல்வர் இந்தப் பேச்சுக்கு கூட்டத்தினர் மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கயத்தாறு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கு என்று ஸ்டாலின் கோவில்பட்டி தொகுதி கயத்தாறுக்கு வந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்தப்போவதும் இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும் திமுகவுக்கு இந்தத் தேர்தல் இறுதித் தேர்தலாக இருக்கும் என்றும் அதிமுக உறுதியாக வெற்றிப் பெறும் என்றும் பேசினார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறந்து விளங்குகிற முதல் மாநிலம் தமிழகம்தான் என்றும் 2006-2011 வரையிலான திமுக ஆட்சி இருண்ட ஆட்சி, எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்றும் தெரியாது என்றும் கடும் விமர்சனம் செய்து இருந்தார். மேலும் தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றும் மக்கள் மத்தியில் விளக்கம் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.