close
Choose your channels

'ஜெயிலர்' படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்.. நெல்சன் பகிர்ந்த புகைப்படம்..!

Saturday, August 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் முதல் நாளே 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் பார்த்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ’ஜெயிலர்’ திரைப்படத்தை பார்த்து உள்ள தகவலை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

மதிப்புக்குரிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ’ஜெயிலர்’ படத்தை பார்க்க வந்ததற்கு நன்றி. அவர் கொடுத்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் எனக்கும் என்னுடைய குழுவினர்களுக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் தன்னை பாராட்டிய போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நான்காவது படத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் எடுத்த நெல்சன், முதலமைச்சர் அவர்களிடமும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment