close
Choose your channels

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. 'தளபதி 69' படத்தை இயக்கும் காமெடி நடிகர்..!

Thursday, February 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69’ திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்த போதிலும் தற்போது திடீர் திருப்பமாக காமெடி நடிகர் ஒருவர் இந்த படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் அரசியலில் குதிக்க இருப்பதால் ’தளபதி 69’ படம் தான் அவரது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை எச் வினோத், கார்த்திக் சுப்புராஜ், அட்லி, வெற்றிமாறன் உள்ளிட்டவர்களில் ஒருவர் 'தளபதி 69’ படத்தை இயக்குவார்கள் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய்யை சந்தித்து கதை கூறியதாக அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கதை தான் படமாக இருப்பதாக தெரிகிறது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையின்படி ’தளபதி 69’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரில் ஒருவர் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.