close
Choose your channels

நீட் தேர்வு-விவசாய கடன் ரத்து, ரபேல் விசாரணை: அதிரடியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Tuesday, April 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சற்றுமுன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய அம்சம் தமிழகமே எதிர்பார்த்த நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என உறுதி. இனி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

* ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரப்படும்

* மத்திய பட்ஜெட்டில் 6% நிதி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் -காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

* அரசுத்துறையில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நீக்கப்படும்

* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

* மாதம் ரூ.6000 திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் .

* முன் நிபந்தனை எதுவும் இன்றி காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேச்சு நடத்தப்படும்.

* மக்களவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* புதிய வேலை வாய்ப்பை உருவாக்குதல் .

* தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி.

* விவசாயத்திற்கு தனி பட்ஜெட்.

* அரசு துறையில் காலியாக உள்ள 22 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் .

* 2030க்குள் இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்

* நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி அமல்படுத்தப்படும்

* தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்

* பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.

* தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்களை தடுக்கப்படும்.

* 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.

*2023 - 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.

* காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.