close
Choose your channels

இந்த கார் பாலாவுக்கும் சொந்தம்: இணையத்தில் வைரலாகும் 'குக் வித் கோமாளி' 'புகழ்' மீம்!

Sunday, March 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு நடிகர் கார் வாங்கினால் அதை அவரது ரசிகர்களே கொண்டாடுகிறார்கள் என்றால் அது குக் வித் கோமாளி புகழ் விஷயத்தில் தான் இருக்கும். சமீபத்தில் சொந்த கார் வாங்கிய புகழுக்கு அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக பாராட்டுகளை குவித்து வருகின்றனர். ரசிகர்கள் தாங்களே கார் வாங்கியது போன்று மகிழ்ச்சி அடைந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரில் ஒருவரான பாலாவின் ரசிகர் ஒருவர் மிகவும் வருத்தத்தோடு இருப்பது போன்றும், ‘ஏன் வருத்ததோடு இருக்கிறாய்? என்று அவருடைய நண்பர் கேள்வி கேட்க, அதற்கு அந்த ரசிகர், ‘புகழ் கார் வாங்கி விட்டார், பாலா எப்போது கார் வாங்குவார்? என்று கூற அதற்கு அங்கு வரும் புகழ் நானும் பாலாவும் வேற வேற இல்ல, இது பாலாவின் காரும் தான்’ என்று கூறும் வகையில் அந்த மீம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மீம் புகழின் பரந்த மனதை வெளிப்படுத்துவதாக கூறப்படும் நிலையில் இது மீம் இல்லை என்றும் உண்மையாகவே பாலாவும் புகழும் நெருங்கிய நண்பர்கள் என்றும் புகழ் கார் வாங்கியது பாலா கார் வாங்கியது போல தான் என்றும் இருதரப்புக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.