close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக 'குக் வித் கோமாளி பிரபலம்? வைரல் புகைப்படம்..!

Friday, September 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் வெளியாகின என்பதும் அதில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி குறித்த தகவலை தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம். குறிப்பாக இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வரும் நிலையில் தற்போது குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. அவரே பிக்பாஸ் பேனர் முன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளதால் அவர் போட்டியாளராக கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி ஜாக்குலின், இரவின் நிழல் நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்விராஜ், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்பட சிலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி’ பிரபலம் குரேஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதியில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment