close
Choose your channels

விரைவில் வருகிறது 'குக் வித் கோமாளி சீசன் 5': போட்டியாளர்கள் இவர்களா?

Tuesday, January 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் நான்கு சீசனும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு ஜனரஞ்சனமாகவும் காமெடியாகவும் கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மேலும் மெருகேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொடங்க விஜய் டிவி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சீசனிலும் முந்தைய சீசன்கள் போல் சில பிரபலங்களும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகை வடிவுக்கரசி, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் அதுமட்டுமின்றி சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷ்ணுவும் ஒரு போட்டியாளர் என கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த சீசனில் கலந்து கொண்ட கோமாளிகளோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முந்தைய சீசன்கள் போலவே ரக்சன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்றும் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்கள் ஆக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.