'குக் வித் கோமாளி' சீசன் 5.. முதல் எபிசோடு படப்பிடிப்பு.. விஷால் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Thursday,April 11 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்களாக விறுவிறுப்பாக சென்ற நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் மணிமேகலை மற்றும் குரேஷி தொகுப்பாளர்களாக பணிபுரிய உள்ளனர். மேலும் குரேஷி, புகழ், சுனிதா ராமர் உள்பட ஒரு சிலர் கோமாளிகளாகவும் பங்கு கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் எபிசோடு படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படும் நிலையில் சில போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகியோர் போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஷால் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் உள்ளதாக தெரிகிறது. ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படத்தின் குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இந்த எபிசோடில் கலந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்த காட்சிகளும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 ஒளிபரப்பாகும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தங்க கோவில் முன் தகதகவென ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் முன் தங்கம் போல் தகதகவென ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில்

நீ நேர்ல தாண்டா ஒரு மாதிரி இருக்க.. கேமிராவுல சூப்பரா இருக்க.. பிரதீப் ரங்கநாதன் அடுத்த பட அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது தெரிந்தது.

எனக்கே தெரியாமல் செய்த இந்த விஷயம் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது நடிகை வைஷு விளக்கம்.

நிறைய இடங்களில் நான் நடித்த காட்சிகளை கட் செய்து விட்டார்கள்.அது மிகவும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது.மனம் வருத்தப்பட்டேன்...

'கோட்' படத்திற்கு சம்மதம்.. 'தலைவர் 171' படத்திற்கு மறுப்பு.. பிரபல நடிகரின் முடிவுக்கு என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்து 'கோட்' ரோட் திரைப்படத்தில் வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி

'தளபதி 69' படத்தில் இருந்து திடீரென பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. புதிய தயாரிப்பாளர் யார்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 69' திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் பின்வாங்கி