close
Choose your channels

'குக் வித் கோமாளி' சீசன் 5.. முதல் எபிசோடு படப்பிடிப்பு.. விஷால் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!

Thursday, April 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்களாக விறுவிறுப்பாக சென்ற நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் மணிமேகலை மற்றும் குரேஷி தொகுப்பாளர்களாக பணிபுரிய உள்ளனர். மேலும் குரேஷி, புகழ், சுனிதா ராமர் உள்பட ஒரு சிலர் கோமாளிகளாகவும் பங்கு கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் எபிசோடு படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படும் நிலையில் சில போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகியோர் போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஷால் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் உள்ளதாக தெரிகிறது. ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படத்தின் குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இந்த எபிசோடில் கலந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்த காட்சிகளும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 ஒளிபரப்பாகும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.