close
Choose your channels

'குக் வித் கோமாளி' கனி வீட்டில் இத்தனை புத்தகங்களா? ஒரு மினி நூலகமே இருக்கும்போல!

Saturday, June 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த சீசன் 2 நிகழ்ச்சியில் கனி டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் தெரிந்ததே. கனி ஏற்கனவே யூடிபில் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக அவர் பொன்னியின் செல்வன் கதையை கூறும் பாணியே தனி அழகு என்பதும், அந்த கதையின் ஒவ்வொரு கேரக்டரையும் அவர் ரசித்து, அந்த கேரக்டருக்கு விளக்கம் அளிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் கதையை எழுதிய அமரர் கல்கி அவர்களே இந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் கதையின் கேரக்டர்களை யோசித்திருப்பாரா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு கனி, ஒவ்வொரு கேரக்டரையும் அவ அவ்வளவு அழகாக விளக்கம் அளிப்பார். குறிப்பாக ஆழ்வார்க்கடியான் கேரக்டர் தான் கனிக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்பதும் அந்த கேரக்டரை அவர் மிகவும் சுவராசியமாக விளக்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் கனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு பின்னணியில் ஒரு மினி நூலகமே இருப்பது போன்று ஏராளமான புத்தகங்களை அவர் தனது வீட்டில் வைத்து இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. ’நிறைய புத்தகங்கள் இருக்கிறது, ஆனால் படிப்பதற்குதான் நேரம் கொஞ்சமாக இருக்கின்றது’ என்று அதில் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment