close
Choose your channels

ரைஸ் குக்கரை திருமணம் செய்த நபர்… 4 நாட்களில் விவாகரத்துக்குக் கூறிய பலே காரணம்!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வது, செக்ஸ் பொம்மையைத் திருமணம் செய்து கொள்வது, வளர்த்த நாயை திருமணம் செய்து கொள்வது என சமீபகாலமாக நடக்கும் விசித்திரங்களுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரைஸ் குக்கரை திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர் அதை வெறும் 4 நாட்களில் விவகாரத்து செய்து சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தோனேஷியாவை சேர்ந்த கொய்ரூல் அனம் எனும் இளைஞர் “ரைஸ் குக்கர்“ அழகாகவும் அன்பாகவும் இருப்பதோடு அழகாகச் சமைத்துத் தருகிறது எனக்கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இந்தத் திருமணத்தின்போது மணமகனுக்கான உடையை அணிந்திருந்த இளைஞர் ரைஸ் குக்கரை மணமகளைப் போலவே அழகாக அலங்கரித்து இருந்தார்.

இதனால் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்ற அவர் தற்போது ரைஸ் குக்கரை விவாகரத்து செய்து மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து காரணம் கூறிய அந்த இளைஞர், ரைஸ் குக்கர் வெறும் அரிசி சாதத்தை மட்டுமே சமைத்து தருகிறது. அதனால் விவாகரத்து செய்கிறேன் என ரைஸ் குக்கர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதையடுத்து ரைஸ் குக்கரை திருமணம் செய்ததால் சோஷியல் மீடியாவில் பிரபலமான கொய்ரூல் பார்த்த சில நெட்டிசன்கள் இந்த மனுஷன் அடுத்து எதைத் திருமணம் செய்யப் போகிறாரோ? இவர்களுடைய விசித்திர செய்கைகளுக்கு ஒரு எல்லையே இல்லையா? எனப் புலம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.