close
Choose your channels

பீச்சில் தோழிகளுடன் நயன்தாரா? வேறு யார் யார் இருக்காங்க பாருங்க..!

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா பீச்சில் தனது கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார் என்பதும் இப்போது கூட அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

சமீபத்தில் கூட அவர் ’டியர் ஸ்டூடண்ட்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பதையும் பார்த்தோம். ஏற்கனவே அவர் மாதவனுடன் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில், யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது கணவருடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா செல்லும் நயன்தாரா அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தோழிகளுடன் பீச்சில் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் அட்டகாசமாக போஸ் கொடுத்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.