close
Choose your channels

2வது படம் தொடங்கும் முன்பே, 3வது படத்தில் ஒப்பந்தமான 'டாடா' இயக்குனர்.. ஹீரோ இவர் தான்..!

Wednesday, June 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ‘டாடா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் இயக்குனர் கணேஷ் பாபுவின் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை என்ற நிலையில் அவர் இயக்க இருக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கணேஷ் பாபு இயக்கும் மூன்றாவது படத்தில் ஜீவா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் தெரிகிறது. தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வரும் நடிகர் ஜீவாவுக்கு இந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோலிவுட் திரையுலகில் முதல் படத்தை வெற்றி படமாக கொடுத்த பல இயக்குனர்கள் அடுத்த படத்திற்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலையில் ‘டாடா’ இயக்குனருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்து வருவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment