தீபாவின் திடீர் முடிவால் அதிமுக இன்ப அதிர்ச்சி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். மேலும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்பமனு வாங்கி சென்றதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தீபாவின் கட்சியினர் மற்றும் தீபா, மாதவன் போட்டியிடும் தொகுதிகள் குறித்த வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அதிமுகவின் ஓட்டுக்களை அவர் பிரிப்பார் என்றும் கூறப்பட்டதால் அதிமுக கலக்கத்தில் இருந்தது.

இந்த நிலையில் அதிமுகவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வரும் 'நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு என்றும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற தனது தொண்டர்கள் பாடுபடுவர் என்றும் தீபா சற்றுமுன் அறிவித்துள்ளார்.

More News

வீட்டுக்காவலில் நடிகர் மோகன்பாபு? ஆந்திராவில் பரபரப்பு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல நடிகையுடன் விஜய் தேவரகொண்டா திருமணமா?

அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலும் 'நோட்டா', 'நடிகையர் திலகம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்

தேர்தல் சமயத்தில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில் பாஜகவில் இன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இணைந்துள்ளார்.

நிதின் சத்யாவின் அடுத்த படத்தில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை!

நடிகர் நிதின்சத்யா தயாரித்த முதல் படமான 'ஜருகண்டி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் சமீபத்தில் தனது அடுத்த தயாரிப்பு படத்தை தொடங்கினார்.

கமல் கட்சி நிர்வாகிகளுக்கு 2 மினி பேருந்து போதும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

கடந்த சில மாதங்களாக கமல் கட்சியை கிண்டலாக விமர்சனம் செய்து அதிமுக அமைச்சர்கள் சீண்டுவதும் அதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதும் வழக்கமாக நடைபெற்று வரும் சம்பவங்களாக உள்ளது