close
Choose your channels

நிதின் சத்யாவின் அடுத்த படத்தில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை!

Friday, March 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் நிதின்சத்யா தயாரித்த முதல் படமான 'ஜருகண்டி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் சமீபத்தில் தனது அடுத்த தயாரிப்பு படத்தை தொடங்கினார். இந்த படத்தின் ஹீரோவாக வைபவ் நடித்து வருகிறார். வைபவ் போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் 'காலா' நாயகி ஈஸ்வரிராவ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது தொலைக்காட்சி தொடர் நடிகை வாணிபோஜன் இணைந்துள்ளார். இவர் தொலைக்காட்சிகளில் பிரபலமான 'ஆஹா', 'மாயா' மற்றும் 'தெய்வமகள்' போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாணிபோஜன் இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கவுள்ளார். இவர் பிரபல இயக்குனர் மோகன்ராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். மேலும் இந்த படத்தில் பூர்ணா, மைம்ஸ் கோபி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சாண்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.