close
Choose your channels

பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்

Friday, March 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்தல் சமயத்தில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில் பாஜகவில் இன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்த கவுதம் காம்பீர் இன்று மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர்களின் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். கவுதம் காம்பீர் பாஜகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட கவுதம் காம்பீர், ' நாட்டிற்கு சேவை செய்ய பாஜக தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி கூறிக்கொள்வதாகவும், பிரதமர் மோடி நாட்டிற்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் தன்னை கவர்ந்ததால் பாஜகவில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாஜகவின் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலில் கவுதம் காம்பீர் பெயர் இடம்பெறும் என்றும் அவர் டெல்லியில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.