close
Choose your channels

பி.வி.சிந்துவிற்கு விருந்தளித்த பாலிவுட் நட்சத்திர தம்பதி… வைரல் புகைப்படம்!

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தொடர்ந்து இரண்டு முறை தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை நேரில் அழைத்து பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே தம்பதியினர் விருந்து அளித்து பாராட்டி உள்ளனர்.

ஹைத்ராபாத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் இந்தியாவில் இருந்து முதல்முறையாக ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் கலந்து கொண்டு தற்போது வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சொன்றுள்ளார். இதனால் தொடர்ந்து இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

இதையடுத்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு விருந்து அளித்து பாராட்டியும் வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி கடந்த வாரம் பி.வி.சிந்துவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து விருந்து வைத்து பாராட்டு தெரிவித்தார்.

அதேபோல தற்போது பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே தம்பதியினர் பி.வி.சிந்துவை நேற்று நட்சத்திர ஹோட்டலுக்கு நேரில் வரவழைத்து இரவு விருந்து வைத்து பாராட்டுத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர். நடிகை தீபிகா கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பி.வி.சிந்துவோடு ரன்வீர்- தீபிகா தம்பதிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos