சொந்த வீட்டிலேயே கொள்ளை: தெய்வமகள் சீரியல் நடிகை திடீர் தலைமறைவு!

  • IndiaGlitz, [Wednesday,September 16 2020]

சொந்த வீட்டிலேயே கணவனுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த தெய்வமகள் சீரியல் நடிகை ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள விவசாயி ஒருவரின் மகன் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டிவி சீரியல் நடிகைகளின் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியலில் நடித்த சுசித்ரா என்ற நடிகையுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் செலவுக்கு பணமில்லாமல் இருவரும் தவித்துள்ளனர். இந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு தனது மனைவி நடிகை சுசித்ராவை மணிகண்டன் அழைத்துச் சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

மணிகண்டன் அங்கு சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்த நிலையில் அவரது வீட்டில் இருந் நகை மற்றும் பணத்தை பார்த்ததும் கணவனிடம் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்னைக்கு சென்று குறும்படம் தயாரித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யலாம் என்று சுசித்ரா ஐடியா கொடுத்துள்ளார்

இதனை அடுத்து சுசித்ராவை மட்டும் சென்னைக்கு அனுப்பி விட்டு மணிகண்டன் சில நாட்கள் கழித்து அந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார். ஆனால் இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர்

இந்த நிலையில் காதல் கணவன் கொள்ளை அடிக்கும் போது மாட்டிக் கொண்டதை அறிந்த தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 

கணவனுக்கு அவரது சொந்த வீட்டிலேயே கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்த தெய்வமகள் சீரியல் நடிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

சூர்யா மக்கள் பிரதிநிதியாக வேண்டும்: தமிழ் திரைப்பட இயக்குனர் விருப்பம் 

நடிகர் சூர்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் குறித்து வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டது

'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் மேலும் ஒரு பிரபலம்: ரசிகர்கள் உற்சாகம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள 'பிக்பாஸ் நான்காவது சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்களுக்கு

ரஞ்சித் ஜெயகொடியின் அடுத்த படத்திற்கு உதவும் விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'புரியாத புதிர்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'மாநகரம்' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'கைதி' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் என்பது தெரிந்ததே

நான்கு வரி வசனத்தை ஒரு நிமிடத்தில் மனப்பாடம் செய்ய வேண்டுமா? விக்ரம் பட நடிகர் வெளியிட்ட காமெடி வீடியோ 

விக்ரம் நடித்துவரும் 'கோப்ரா' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் நான்கு வரி வசனத்தை ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்ய இயக்குனர் அஜய் ஞானமுத்து வற்புறுத்தினார்