close
Choose your channels

ரஞ்சித் ஜெயகொடியின் அடுத்த படத்திற்கு உதவும் விஜய்சேதுபதி!

Tuesday, September 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த ’புரியாத புதிர்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி. இவர் தற்போது ’யாருக்கும் அஞ்சேல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிந்து மாதவி முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய் சேதுபதிதான் கடந்த மார்ச் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பதும், தற்போது அதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவரே வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.