பெண் சாமியாருக்கு இருக்கை கொடுத்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

  • IndiaGlitz, [Friday,October 06 2017]

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா சமிபத்தில் டெல்லியில் உள்ள விவேக்விஹார் காவல்நிலையத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு தனது இருக்கையை காவல்நிலையத்தின் அதிகாரி சஞ்சய் ஷர்மா தந்தது மட்டுமின்றி, பெண் சாமியாரின் சிகப்பு கலர் துப்பட்டாவை அவர் தனது கழுத்தில் அணிந்து கொண்டார். காவல்துறை சீருடை அணிந்து பணியில் இருக்கும்போது அவர் செய்த இந்த விஷயம் காட்டுத்தீ போன்று புகைப்படம் மற்றும் வீடியொ வடிவில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விவேக்விஹார் காவல்நிலைய அதிகாரி சஞ்சய் சர்மா மற்றும் அவருடன் இருந்த இன்னொரு அதிகாரி பிராஜ் பூஷன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக டெல்லி துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பெண் சாமியார் ராதே மா மீது பாலியல் வழக்கு, வரதட்சணை வழக்கு என இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு காவல்துறை அதிகாரிகளே வி.ஐ.பி உபசரிப்பு அளித்துள்ளது காவல்துறைக்கு ஏற்பட்ட தலைகுனிவாக பார்க்கப்படுகிறது.

More News

சசிகலாவுக்கு 5 நாள் பரோல். இன்று மாலை சென்னை வருகிறார்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளதாகவும்

திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஏ.எம்.ரத்னம் மருமகள்

ஏ.எம்.ரத்னம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி ஐஸ்வர்யா பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபிராஜ்

சத்யராஜ் மகனும், இளையதலைமுறை நடிகர்களில் ஒருவருமான சிபிராஜ் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz சார்பில் அவருக்கு எங்களது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தளபதியின் 'மெர்சலுக்கு புகழாரம் சூட்டிய பிரமாண்ட இயக்குனர்

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி விஜய்யின் 'மெர்சல்' படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று வாழ்த்துக்கள் கூறி அந்த படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்

பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல, தானா சேர்ந்த கூட்டம். ஓவியா

பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளை ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் தினமும் அவர் ஏதாவது ஒரு விஷயத்திற்காக டிரெண்டில் உள்ளார்