close
Choose your channels

அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்!

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த தனுஷின் 40வது திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து சற்றுமுன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் சமூகவலைதளத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ’ஜகமே தந்திரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு சுருளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும், மே 1ஆம் தேதி அஜீத் பிறந்தநாளில் தனுஷ் படம் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz