கையில் துப்பாக்கியுடன் தனுஷ்... 'கேப்டன் மில்லர்' படத்தின் ஒரு நிமிட வீடியோ ரிலீஸ்!

  • IndiaGlitz, [Sunday,January 22 2023]

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் ஒரு நிமிட வீடியோவை படக் குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்திற்கும் மேலாக இருக்கும் இந்த வீடியோவில் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமாக செட் போடும் காட்சிகள் உள்ளன. மேலும் வீடியோவின் இறுதியில் கையில் துப்பாக்கி உடன் தனுஷ் ஆவேசமாக இருக்கும் காட்சி உள்ளன. இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகின்றன.

More News

'D50' படத்தின் செம அப்டேட்.. இந்த ஒரே காரணத்தால் படம் சூப்பர் ஹிட்!

தனுஷ் நடித்து இயக்க இருக்கும் அவரது 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே.

என் புருஷன் பிரேம்ஜி தான்.. பிரபல பாடகியின் பதிவால் பரபரப்பு!

'என் புருஷனோட நான் சேர்ந்து விட்டேன்' என பிரபல பாடகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெண்களுக்காக பிரத்யேக காட்சி.. மேளதாளத்துடன் வரவேற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்!

கோவையில் 'வாரிசு' திரைப்படத்திற்கு பெண்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்ட நிலையில் அந்த காட்சிக்கு படம் பார்க்க வந்த பெண்களை மேளதாளத்துடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் வரவேற்று உள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபலம்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலிருந்து தான் விலகி விட்டதாக சமூக வலைதளத்தில் பிரபலம் ஒருவர் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மைசூர் அரண்மனையில் மகளுடன் நடிகை சாயிஷா: என்ன விசேஷம்?

நடிகை சாயிஷாவின் நெருங்கிய தோழி திருமணம் மைசூர் அரண்மனையில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் அமைந்துள்ளார்.