close
Choose your channels

கையில் துப்பாக்கியுடன் தனுஷ்... 'கேப்டன் மில்லர்' படத்தின் ஒரு நிமிட வீடியோ ரிலீஸ்!

Sunday, January 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் ஒரு நிமிட வீடியோவை படக் குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்திற்கும் மேலாக இருக்கும் இந்த வீடியோவில் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமாக செட் போடும் காட்சிகள் உள்ளன. மேலும் வீடியோவின் இறுதியில் கையில் துப்பாக்கி உடன் தனுஷ் ஆவேசமாக இருக்கும் காட்சி உள்ளன. இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.