close
Choose your channels

பெண்களுக்காக பிரத்யேக காட்சி.. மேளதாளத்துடன் வரவேற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்!

Sunday, January 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவையில் ’வாரிசு’ திரைப்படத்திற்கு பெண்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்ட நிலையில் அந்த காட்சிக்கு படம் பார்க்க வந்த பெண்களை மேளதாளத்துடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் வரவேற்று உள்ளனர்.

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. ரூபாய் 300 கோடி வசூலை நோக்கி இந்த படத்தின் வசூல் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பெண்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் குவிந்து வருவதாகவும் ரிப்பீட் ஆடியன்ஸ்கள் அதிகமாக வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்களுக்காக பிரத்யேக காட்சி ஒன்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்த காட்சியை பார்க்க வந்த பெண்களை மேளதாளத்துடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் வரவேற்க ஏற்பாடு செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே’வாரிசு’ திரைப்படம் வெளியான முதல் தினத்தில் கேரளாவில் உள்ள ஒரு திரையரங்கில் முழுக்க முழுக்க பெண்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.