close
Choose your channels

தனுஷின் ஆக்ரோஷம், துப்பாக்கி குண்டுகளின் முழக்கம்.. 'கேப்டன் மில்லர்' டீசர் எப்படி இருக்கிறது?

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் இன்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய இந்த படம் வரலாற்று பின்னணி கொண்ட படமாக உள்ளது என்பது இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.

தொடக்கத்தில் இருந்து இறுதிவரை துப்பாக்கி குண்டுகளின் முழக்கத்தை பார்க்க முடிகிறது. தனுஷ் இந்த படத்தில் ஆயுதம் ஏந்திய போராளியாக நடித்துள்ளார் என்பதும் அவரது கூர்ந்த பார்வை அவரது கேரக்டரை வலிமையாக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் பார்த்து பழகிய பிரியங்கா அருள்மோகன் துப்பாக்கி ஏந்தும் காட்சியையும் பார்க்க முடிகிறது. சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், ஆகியோர்களின் இண்ட்ரோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை பெறுகிறது. குறிப்பாக ஜான் கொகைன் புதுமையான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அவருக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்கும் என்பதும் தெரிய வருகிறது.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசை, சித்தார்த் கேமிரா ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். மொத்தத்தில் ’கேப்டன் மில்லர்’ டீசர் முழுக்க பிரமாண்டம் மற்றும் தனுஷின் நடிப்பு ஆகியவை காரணமாக எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் இந்த டீசரின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.