close
Choose your channels

தனுஷின் 'D50' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வேற லெவல் டைட்டில்..!

Monday, February 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷின் 50வது திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து அவரே இயக்கி வந்தார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்திற்கு ’ராயன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அந்த டைட்டில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது,

மொட்டை தலையுடன் அட்டகாசமாக மிரள வைக்கும் அளவுக்கு இருக்கும் தனுஷின் இந்த கெட்டப் நிச்சயம் அவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் இந்த ஆண்டு வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.