'மாரி 2' ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ்

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் கடந்த சில நாட்களாக டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. எனவே வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது இந்த படம் வருமா? என்ற கேள்விக்குறி தனுஷின் ரசிகர்களிடையே இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் 'மாரி 2' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 5ல் அதாவது  நாளை வெளிவரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் தனது மூகவலைத்தள பக்கத்தில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

'மாரி' படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

More News

பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பீட்டா தெரிவித்த அதிருப்தி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது நீண்டநாள் காதலரும் அமெரிக்காவின் பிரபல பாடகருமான நிக் ஜோன்ஸை கடந்த ஞாயிறு அன்று திருமணம் செய்து கொண்டார்.

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் '2.0' செய்த சாதனை

கிராண்ட் ரெக்ஸ் என்ற இந்த திரையரங்கில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம்

சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்த தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த: 'பேட்ட' சிங்கிள் டிராக் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் அட்டகாசமாக அனிருத் இசையமைத்த 'மரண மாஸ் குத்து பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

என்.ஜி.கே புதிய அப்டேட்: தயாரிப்பாளர் தகவலால் ரசிகர்கள் குஷி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இடையில் செல்வாரகவன்